வரலாறு காணாத உச்சம் பெற்ற தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத உச்சம் பெற்ற தங்கம் விலை...சாமானிய மக்கள் அதிர்ச்சி
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480-க்கு விற்பனையானது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.64,560-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட  தங்கம் விலை நேற்று சவரன் ரூ.64,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 64,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ. 8,075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com