2-வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் ரூ1,760 குறைந்துள்ளது.
2-வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்தது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை 2-வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 விலை குறைந்து ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் ரூ1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com