தொடர்ந்து 3வது நாளாக சரிந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக சரிந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 25ம் தேதி ஒரு சவரன் ரூ.64,600-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ. 7,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.105 விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com