தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தவாறு இருக்கிறது.

Also Read
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகர் தவெகவில் இணைந்தார்
கோப்புப்படம்

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,16,480க்கும், ஒரு கிராம் ரூ.14,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

Also Read
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு
கோப்புப்படம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் 14,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com