காலையில் குறைந்து, பிற்பகலில் உயர்ந்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்த நிலையில் பிற்பகலில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே பயணிக்கிறது. கடந்த 1-ந்தேதி விலை அதிகரித்து, 2-ந்தேதி விலை குறைந்த நிலையில், அதன் பின்னர் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. சவரனுக்கு ரூ.1,120-ம், கிராமுக்கு ரூ.140-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் குறைந்த தங்கம் விலை பிற்பகலில் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகலில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று காலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வெள்ளி விலை இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com