அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 7-ந்தேதி தங்கம் விலை சற்று உயர்வை கண்டது. அதன் பின்னர் விலையில் மாற்றமின்றி தொடர்ச்சியாக 3 நாட்கள் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com