தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 அதிரடியாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8,560 அதிரடியாக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இறக்குமதி வரி உயர்வு காரணமாக தங்கம், வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,330-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8,560 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலையைப் போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30-ம், கிலோவுக்கு ரூ.30 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com