தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 7-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை விலை அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விலை குறைந்தது. அதன்படி, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும். ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com