வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த 11-ந்தேதி விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவும் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், மறுநாள் (12-ந்தேதி) விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை உயர்ந்து இருந்தது.

நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,860-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் வார தொடக்கமான இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com