தங்கம் விலை மேலும் குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக குறைந்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.276-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:

17.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,200 (இன்று)

16.03.2026 ஒரு சவரன் ரூ.1,17,680 (நேற்று)

15.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080

14.03.2026 ஒரு சவரன் ரூ.1,18,080

13.03.2026 ஒரு சவரன் ரூ.1,19,200

X

Daily Thanthi
www.dailythanthi.com