தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.3,040 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே இறக்கத்தை சந்தித்து வந்தது. கடந்த 15-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14,070-க்கும், சவரன் ரூ.1,12,560-க்கும் விற்பனையானது. இது படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்கப்பட்டது.

இதனிடையே நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3,040-ம், கிராமுக்கு ரூ.380-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com