சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன.?

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது.
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த 19-ந்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 25-ந்தேதியில் இருந்து விலை சற்று உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது குறைந்துகொண்டே வருகிறது.

அதன்படி நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,600 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்;

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாரா வகையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்ப்னை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும், கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, வெள்ளி விலையும் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com