அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது.
தங்கம் விலை
Published on: 

சென்னை,

வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

தொடர் உயர்வு

அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.

நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கும், கிராமிற்கு ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 107,080-க்கு, கிராமிற்கு மேலும் ரூ. 285 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சரிந்த தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் ரூ. 105,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 205க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X