சென்னையில் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?
Published on

சென்னை,

வார தொடக்கமான இன்றும் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே இறக்கத்தை சந்தித்து வந்தது. கடந்த 19-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.3,040-ம், கிராமுக்கு ரூ.380-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,560-க்கும், ஒரு கிராம் ரூ.13,570-க்கும் விற்கப்பட்டது.

நேற்று முன் தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நேற்று தங்கம் விலையில் எவ்வித மற்றமும் இல்லை.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், வார தொடக்கமான இன்றும் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com