

சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லை.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஞாயிறு விடுமுறை தினமான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,280-க்கும், ஒரு கிராம் ரூ.14,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.