நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தங்கம் விலை மீண்டும் சரிவு..!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தங்கம் விலை மீண்டும் சரிவு..!
Published on: 

சென்னை,

தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் விலை சரிவு

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 210-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை திடீரென சரிந்தது. கிராமுக்கு ரூ.195-ம், சவரனுக்கு ரூ.1 ஆயிரத்து 560-ம் குறைந்தது.

அதன்படி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 15-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்திருந்தது. வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும், கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் தடாலடியாக சரிந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,815-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

X