தொண்டர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன் - இயக்குநர் சேரன்

எந்த பாடமும் எடுக்காமல் ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது என்று ‘நாம் தமிழர் கட்சி’யை பாராட்டி சேரன் பதிவிட்டுள்ளார்.
தொண்டர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன் - இயக்குநர் சேரன்
Published on

வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ‘நாம் தமிழர் கட்சி’க்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார் இயக்குநர் சேரன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை அவர் சாடி, “வீரவசனம் பேசாம கொள்கை குறித்து பிரசாரத்தில் பேசுங்கள்” என பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், வாக்காளர்களுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் பதிவில் “இன்னும் 6 நாள் நேரம் இருக்கு... ஒரு போட்டோ இப்படி எடுத்து போட்டுற சொல்லுங்க பார்க்கலாம்.... ஒழுக்கம் கற்பிப்பவனே உண்மையான தலைவன்... எந்த பாடமும் எடுக்காமல் இந்த ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமே இந்த நாட்டை ஒழுங்குபடுத்தும் வல்லமை கொண்டது... எண்ணற்ற மாநாடுகளில் எங்கள் தம்பி தங்கைகளின் ஒழுக்கமும் மாண்பும் நேர்மையும் கண்டிருப்பீர்... அவையெல்லாம் எங்களின் சிந்தனையில் நாங்கள் கட்டமைத்தது... நாடும், எங்கள் அரசியலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என சீமான் சொல்லித்தரவில்லை..

அவரின் உழைப்பும் பேச்சும் அயரா முயற்சியும் எங்களை எங்களின் தம்பி தங்கைகளை கட்டுக்கோப்பாய் இயங்க வைக்கிறது.. இருக்க வைக்கிறது... பூவை எறிந்தாலே ஓடிச்சென்று வண்டிக்குள் புகவில்லை நாங்கள்... வரும் வழியில் மூதாட்டியை தள்ளிவிடவில்லை நாங்கள்... குழந்தையை வைத்திருக்கும் மனிதரை துச்சமாய் மதிக்கவில்லை நாங்கள்... மாறாக எல்லோரிடமும் அன்பு காட்டினோம்.. அதன் பயன் இன்று எங்களுக்கான ஒழுக்கத்துடன் எங்களின் லட்சக்கணக்கான பிள்ளைகள்.... இந்த தேர்தலில் அவர்களின் வெற்றி சொல்லும் வருங்கால தமிழகத்தின் ஒழுக்கம் எதுவென.... வெல்வோம் நிச்சயம்... ” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com