ரூ.35 கோடி வசூலித்த அபிஷன் ஜீவிந்த்தின் “வித் லவ்” திரைப்படம்

பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான ‘வித் லவ்’ படத்திற்கு இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரூ.35 கோடி வசூலித்த  அபிஷன் ஜீவிந்த்தின் “வித் லவ்” திரைப்படம்
Published on

சென்னை,

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த பிப்ரவரி 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பள்ளிகால கதையுடன் கூடிய நகைச்சுவை காதல் படமாக உருவான இப்படத்திற்கு இளம் தலைமுறை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை பார்த்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்த நிலையில், தியேட்டர்களில் தொடர்ந்து மக்கள் மத்தியல் வரவேற்பை பெற்று வரும் ‘வித் லவ்’ படத்தின் அதிகாரபூர்வ வசூல் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படம் 25 நாட்களில் ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com