அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

கெளதம் சிவராமன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார், யோக லட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அபிஷன் ஜீவிந்த்  நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
Published on

நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தனர். காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது.

அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பும் சென்னையில் சமீபத்தில் துவங்கியது. படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தில் யோக லட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், அபிஷன் ஜீவிந்த், சிவராஜ்குமார் மற்றும் யோக லட்சுமி ஆகியோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்தப் படத்தின் புதிய படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹார்ட் பீட் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற நடிகை யோகலட்சுமி, முன்னணி இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com