

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தனர். காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது.
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியுள்ளது. படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இணை இயக்குநராக பணிபுரிந்த கெளதம் சிவராமன் இயக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.