சம்பளத்தை உயர்த்திய நடிகை கயாடு லோஹர்


சம்பளத்தை உயர்த்திய நடிகை கயாடு லோஹர்
x
தினத்தந்தி 18 May 2025 8:36 PM IST (Updated: 8 Jun 2025 8:36 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய திரை உலக ரசிகர்களின் கனவு கன்னியாக வளர்ந்து வரும் கயாடு லோஹர் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை.

இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஜீ.வி. பிரகாசுடன் 'இம்மார்டல்' என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 என்ற படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். அடுத்ததாக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோஹர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையில் தென்னிந்திய திரை உலக ரசிகர்களின் கனவு கன்னியாக வளர்ந்து வரும் கயாடு லோகர். தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story