ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார்

அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
ஸ்பெயின் கார் ரேஸில் பங்கேற்கும் அஜித்குமார்
Published on

நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித்குமார்.அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், ' அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.அந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 2728 க்ரெவென்டிக் 24H, செப்டம்பர் 30 அக்டோபர் 1 LMP3 சோதனை, அக்டோபர் 6 மஹிந்திரா பார்முலா E சோதனை, அக்டோபர் 1112 GT4 ஐரோப்பிய தொடர், என நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார்ரேஸிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com