நடிப்பில் களமிறங்கிய 'பிரேமம்' பட இயக்குனர்..!


Alphonse Puthren is a ruthless gangster in Shane Nigams Balti
x
தினத்தந்தி 14 July 2025 6:27 AM IST (Updated: 18 July 2025 11:23 AM IST)
t-max-icont-min-icon

இப்படம் இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது.

சென்னை,

உன்னி சிவலிங்கம் இயக்கும் 'பல்டி' திரைப்படத்தில் 'சோடா பாபு' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 'பிரேமம்' பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான 'பல்டி' படத்தை அறிமுக இயக்குனரான உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சாய் அபயங்கர் இசையில் உருவாகும் இப்படம் இந்தாண்டு ஓணம் பண்டிகைக்கு வெளியாகிறது.

1 More update

Next Story