யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - இயக்குநர் கஸ்தூரி ராஜா

‘காதல் கொண்டேன்’ படத்தின் வெற்றி எங்கள் குடும்ப நிலையை மாற்றியது என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - இயக்குநர் கஸ்தூரி ராஜா
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் வெறும் இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல ஜானரில் கலக்கி உள்ளார். இவரது மகன்கள் தான் செல்வராகன் மற்றும் தனுஷ். இருவரும் திரைத்துறையில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் கஸ்தூரிராஜாவிடம் போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம்தான். கோபாலபுரம் இன்னும் அங்குதான் உள்ளது. கலைஞர் வாழ்ந்த இடம், ஒளி பிறந்த இடம். இளையதளபதியும் அங்கு வரப்போகிறார்கள் என சொல்கிறார்கள். வரட்டும், நமக்கு அரசியல் வேண்டாம். எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். வேண்டாம்னு சொல்ல நம்ம யாரு? நம்ம வர முடியாது வயசு போயிடுச்சு. எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம். ” என கூறினார்.

மேலும் “நான் தேனியில் இருந்து சென்னைக்கு வர ஐம்பது ரூபாய் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். 19 வயதில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் மனைவி விஜயலட்சுமி ஆதரவுடன் சென்னை வந்து கஷ்டப்பட்டு இயக்குனர் ஆனேன். ‘துள்ளுவதோ இளமை’ படம் எங்கள் குடும்பத்தை மாற்றியது. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த செல்வராகவன் சினிமாக்கு வர ஆசைப்பட்ட போது முதலில் படி அப்புறம் சினிமா என்றேன். அவரும் கோல்ட் மெடல் வாங்கி ‘காதல் கொண்டேன்’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தின் வெற்றி எங்கள் குடும்ப நிலையை மாற்றியது. என் இரண்டு மகள்களும் இப்பொழுது சென்னையில் புகழ்பெற்ற டாக்டராக இருக்கிறார்கள். என் மகள் வழி பேரன் பவிஷ் நடித்து வருகிறார். இன்னொரு பேரன் உதவி இயக்குனராக இருக்கிறார். ” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com