'பல்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.
சென்னை,
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ஷேன் நிகாம் தன் 25-வது படமான பல்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த நிலையில் இப்படத்தி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ந் தேதி வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story






