முதல்-அமைச்சர் விஜய்க்கு நம்பர் பிளேட்டை பரிசளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

கோட் திரைப்படம் தவெக தொடங்கப்பட்ட அதே ஆண்டில் வெளியானது.
முதல்-அமைச்சர் விஜய்க்கு நம்பர் பிளேட்டை பரிசளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்று ஆதரவு கட்சிகளின் துணையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

விஜய் பதவியேற்றது முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து அவருக்குப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். கோட் படம் தவெக தொடங்கப்பட்ட அதே ஆண்டில் வெளியானது. அந்தப் படத்தில், விஜய்யின் கார் நம்பர் பிளேட் 'TN 07 CM 2026' என்று அமைக்கப்பட்டிருக்கும். விஜய் 2026-ல் முதல்அமைச்சர் ஆவார் என்று குறிப்பிடும்படி படத்தில் அதனை வைத்திருந்தார் வெங்கட் பிரபு.

இதனைத் தொடர்ந்து, அந்த நம்பர் பிளேட்டை முதல்-அமைச்சர் விஜய்க்கு வெங்கட் பிரபு இன்று பரிசளித்தார். இதுதொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், "ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்முறையாக கோட் படத்தில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்" எனக் குறிப்பிட்டு விஜய்க்கு பரிசு வழங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com