கதாநாயகிகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்வதா? நடிகை கஜோல் காட்டம்

கதாநாயகிகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்வதா? நடிகை கஜோல் காட்டம்
Published on

தமிழில் மின்சார கனவு படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இந்தி நடிகையான கஜோல் நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் வேலை இல்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடித்து இருந்தார். தற்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கஜோல் அளித்துள்ள பேட்டியில், "இளம் கதாநாயகிகள் அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள கூடாது. கடவுள் ஒவ்வொருவரையும் பிரத்தியேகமாக படைத்தார். அந்த உருவத்தை மாற்றிக்கொள்வதற்கு செய்யும் முயற்சிகள் அனைத்துமே வீணானவை.

நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என் உடல்வாகு, நிறம் குறித்தும் நிறைய விமர்சனங்கள் வந்தன. அதற்காக எப்போதுமே நான் வருத்தப்பட்டது இல்லை. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்வது குறித்து யோசித்ததும் இல்லை. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பில் திறமையை வெளிப்படுத்தி என்னை மெருகேற்றிக்கொண்டேன். அதனால்தான் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தேன்.

இன்றைய தலைமுறை கதாநாயகிகளும் அழகை விட திறமையை நம்பினால் நிச்சயம் முன்னேறுவார்கள். கடவுள் நமக்கு கொடுத்த அழகுதான் பிரத்யேகமானது. மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அறுவை சிசிச்சை செய்து கொள்ளக்கூடாது'' என்று காட்டமாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com