சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றத்தை பாராட்டும் ரசிகர்கள்

சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றத்தை பாராட்டும் ரசிகர்கள்
Published on


மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 மற்றும் 60 காலகட்டத்து அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தினர். அந்த காலத்து ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களையே பயன்படுத்தினர். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு இந்த படத்தில் திருப்தி இல்லை. சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்று விமர்சித்து இருந்தார். சாவித்திரியைப்போல் எந்த நடிகையாலும் நடிக்க முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக படித்தும் அவர் நடித்திருந்த படங்களை பார்த்தும் நடித்து வருகிறேன். சாவித்திரி படத்தில் நடிக்க எனக்கு தகுதி இருக்கிறது என்றார்.

தினமும் 3 மணி நேரம் மேக்கப் போட்டு பயிற்சிகள் எடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்த நிலையில் சாவித்திரி, ஜெமினி கணேசனாக நடித்த கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் தோற்றங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் தோற்றம் பிரமாதமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள். இதனால் கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com