

மும்பை,
திரைப் பிரபலங்களிடம் ரசிகர்கள் அவ்வப்போது ஆர்வக்கோளாறு காரணமாக எல்லை மீறுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது.
பிரபல பாலிவுட் நடிகையான நிகிதா ராவல், மும்பையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பை ஏற்ற நிகிதா ராவல், அங்குள்ள புகைப்படக் கலைஞர்களின் விருப்பப்படி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரசிகை ஒருவர் நிகிதா ராவல் அருகே சென்று, செல்பி எடுத்தார். பின்னர் திடீரென்று நிகிதா ராவல் கன்னத்தில் முத்த மிட்டார். பின்னர் ஒருகட்டத்தில் நடிகையின் உதட்டில் ரசிகை 'பச்' என முத்தம் கொடுக்கத் தொடங்கினார்.
இதனால் நிகிதா ராவல் அதிர்ச்சியில் உறைந்து போக, முத்தமிட்ட ரசிகை எதுவுமே நடக்காதது போல அங்கிருந்து சென்றார். இதுதொடர்பான வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது இடங்களில் பிரபலங்களிடம் இப்படி அத்துமீறுவது கூடாது என்று கண்டனங்களும் வலுத்து வருகின்றன.