

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. சவுத்ரி (72) ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் அவர் உயிரிழந்தார்.
தற்போது ஆர்.பி. சவுத்ரியின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், சித்தார்த், விக்ரம் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.