'கேம் சேஞ்சர்': ரசிகர்களை கவர்ந்த'ரா மச்சா மச்சா' பாடலின் புரோமோ

இந்த புரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்தநிலையில், தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
'Game Changer': 'Ra Macha Macha' Promo Hits Fans
Published on

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடலான 'ரா மச்சா மச்சா' விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

இந்தசூழலில், 'ரா மச்சா மச்சா' பாடலின் புரோமோ விடியோவை படக்குழு நேற்று வெளியிட்டு பாடல் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, 'ரா மச்சா மச்சா' பாடல் நாளை வெளியாக உள்ளது.

இந்த புரோமோ வீடியோ ரசிகர்களை கவர்ந்தநிலையில், தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com