'சேயோன்' படத்திற்காக தமிழ் கற்று வருகிறேன்- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.
'சேயோன்' படத்திற்காக தமிழ் கற்று வருகிறேன்- நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
Published on

தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, முழு திரைத்துறையின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இவர் தற்போது, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த படம் ‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் 'சேயோன்' படத்திற்காக தமிழ் கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கமல்ஹாசன் சார் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாருடன் நான் நடிக்கும் 'சேயோன்' படத்தைப் பற்றி இப்போதைக்கு அதிகம் சொல்ல முடியாது

ஆனால், அந்தப் படத்தோட கதைக்கு என்னோட கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப முக்கியமானது.

என்னை ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களுக்குக் காட்டும். ரசிகர்களுடன் உண்மையாக இணைப்பில் இருக்க வேண்டும் என்றால், நாம் நடிக்கும் மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்' படத்திற்கு நானே டப்பிங் பேசினேன். தற்போது தமிழும் தீவிரமாகக் கற்று வருகிறேன். என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com