பணத்துக்காகவே நடிக்க வந்தேன் - பிரியா பவானிசங்கர்

பணத்துக்காகவே நடிக்க வந்தேன் என்று நடிகை பிரியா பவானிசங்கர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பணத்துக்காகவே நடிக்க வந்தேன் - பிரியா பவானிசங்கர்
Published on

தமிழில் 'மேயாத மான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர். கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜய்யுடன் மாபியா, தனுசுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

பிரியா பவானிசங்கர் ஐதராபாத்தில் அளித்துள்ள பேட்டியில், ''யதார்த்தமான வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் தனுசுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். தமிழில் நடிக்க வந்தபோது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன்.

இப்போது தெலுங்கில் குடும்ப கதையோடு அமைந்த ஒரு படத்தில் நடிக்கிறேன். வேலைக்குப்போகாத கணவன், வேலைக்கு செல்லும் மனைவி ஆகியோர் இடையே நடைபெறும் சம்பவங்களின் கோர்வை தான் இந்த படம். சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்களும் திரைத்துறையில் தங்களை நிரூபித்துக்கொள்ள நிறைய கஷ்டப்படுகிறார்கள். இதை பார்க்கும்போது நான் இன்னும் அதிகமாக கஷ்டப்பட வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com