சுவாசிகா இல்லை என்றால் ‘லப்பர் பந்து’ படம் இல்லை - இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து


சுவாசிகா இல்லை என்றால் ‘லப்பர் பந்து’ படம் இல்லை - இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து
x

‘லப்பர்’ பந்து படத்தின் கதையைப் பல நடிகைகளிடம் சொன்னேன் என்று இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், ‘லப்பர் பந்து'. அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோரது நடிப்பில் உருவாகி இருந்த இந்த படத்தை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கி இருந்தார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் தமிழரசன் பேசும்போது, ‘‘சுவாசிகா இல்லை என்றால், ‘லப்பர் பந்து' திரைப்படம் வந்திருக்காது. இந்தப் படத்தின் கதையைப் பல நடிகைகளிடம் சொன்னேன். யாரும் அதில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

‘ஹரிஷ் கல்யாணுக்கு மாமியாரா?' என்று பலரும் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். இப்படியே 6 மாதங்கள் தள்ளிப்போய்விட்டது. ஆனால் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து சுவாசிகா ஒப்புக்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய அடுத்த படம் பற்றியும், அதில் யாரை நடிக்க வைப்பேன் என்றும் கேட்கிறார்கள். ஒரு கதையை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு கதையும்.. அதை இயக்கும்போது அமையும் நேரமும்தான் நாயகனை தேர்வு செய்யும்’’ என்றார்.

1 More update

Next Story