நடிப்பு அசுரனுக்கு ஆக்சன், கட் சொல்ல காத்திருக்கிறேன் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து


நடிப்பு அசுரனுக்கு ஆக்சன், கட் சொல்ல காத்திருக்கிறேன் -  இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து
x

நடிகர் தனுஷுடன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார்.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ‘லப்பர் பந்து’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்த எக்ஸ் பதிவில் “லப்பர் பந்து வெளியாகி, என்னை ஊக்கமளித்த இந்த நாளில், ஊருக்கே தெரிந்த அந்த அப்டேட்டை நானும் சொன்னால்தான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் செய்கிற நன்றியாக இருக்கும்! என்னுடைய அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்.தனுஷுக்கு ரொம்ப நன்றி. கதை சொல்லும்போது என் பதற்றத்தை பொறுத்துக் கொண்டதற்கு” என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியுள்ளார்.

தனுஷுடனான தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை தமிழரசன் பச்சமுத்து முன்னரே தெரிவித்திருந்தார். செப்டம்பர் 14ம் தேதியில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழரசன் பச்சமுத்து, “என்னுடைய அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இடம் பார்க்க இங்கு வந்தேன். தனுஷ் சாரின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கலாம். இவை அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்” என நகைச்சுவையாக கூறியிருந்தார்.

1 More update

Next Story