மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் நடிகர் ரவி மோகன்?

முதலில் ‘ப்ரோ கோடு' படத்தின் பணிகளை ரவி மோகன் தொடங்க உள்ளார்.
மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் நடிகர் ரவி மோகன்?
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். இருவரும் விவாகரத்து வேண்டி கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கொதித்து பேசினார். 'விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்கள் நடிக்க போவதில்லை' என்றும் தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தனது முடிவை ரவி மோகன் மறு பரிசீலனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நடிகர் ரவி மோகனின் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு நடிகர் கார்த்தி, ரவி மோகனை சந்தித்து தைரியம் அளித்துள்ளார் இதையடுத்து ரவி மோகன் மீண்டும் திரைப்பட வேலைகளில் ஈடுபடப்போவதாகவும் முதலில் ‘ப்ரோ கோடு' படத்தின் பணிகளைத் தொடங்கி, முழுமையாக முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரவி மோகன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்ப இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com