ஜனநாயகன் லீக் - சங்கத்தில் இருந்து படத்தொகுப்பாளர் சஸ்பெண்ட்

இது தொடர்பாக தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பரபரப்புத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனநாயகன் லீக் - சங்கத்தில் இருந்து படத்தொகுப்பாளர் சஸ்பெண்ட்
Published on

சென்னை,

விஜய்யின் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்தின் விதிகளை மதிக்காமல் செயல்பட்டதாக, படத்தொகுப்பாளர் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தொகுப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பரபரப்புத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், சங்கத்தின் விதிகளைப் பின்பற்றாமல், சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத நபர்களைத் தனது உதவியாளர்களாகப் பணியில் அமர்த்தியுள்ளார். இது சங்க விதிகளுக்கு எதிரானது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
மீண்டும் திருமண வதந்தியில் சிக்கிய சம்யுக்தா
ஜனநாயகன் லீக் - சங்கத்தில் இருந்து படத்தொகுப்பாளர் சஸ்பெண்ட்

இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘’திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்ததற்கு பிரதீப் ராகவ் நேரடியாகக் காரணமில்லை என்றாலும், அவரது கவனக்குறைவே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களைப் பயன்படுத்தியதும், படத்தின் பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரதீப் ராகவ் சங்கத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தொகுப்பாளர் சங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com