ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்... பாலிவுட்டில் பிரம்மாண்ட என்ட்ரி

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட்டிலும் தனது திரைப்பயணத்தை தொடங்க உள்ளார்.

ரூ.300 கோடி பட்ஜெட் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்... பாலிவுட்டில் பிரம்மாண்ட என்ட்ரி
Published on

சென்னை,

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் லோகா அத்தியாயம் 1: சந்திரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். சூப்பர் ஹீரோயினாக அவர் நடித்த இந்த படம் பல மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல மொழிகளில் இருந்து புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது.

இவர் தற்போது பாலிவுட்டிலும் தனது திரைப்பயணத்தை தொடங்க உள்ளார். ரன்வீர் சிங் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் அவர் இந்தி திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பிரளய்' மூலம் பாலிவுட் என்ட்ரி

'லோகா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் 'பிரளய்'* என்ற ஜாம்பி த்ரில்லர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச பயிற்சியாளர்களிடம் சிறப்பு சண்டைப் பயிற்சி பெற அவர் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் படப்பிடிப்பு

'பிரளய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து, படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள 'லோகா' படத்தின் தொடர்ச்சியான 'லோகா: சாப்டர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com