‘கர’ படம்: சூரஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு நடிக்கும் ‘கர’ படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகிறது.

‘கர’ படம்: சூரஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

'போர் தொழில்' படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

Also Read
"கெணத்த காணோம்" வெற்றி விழாவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த யோகி பாபு

‘கர’ படம்: சூரஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில், கர படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடுவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு "பரதன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகை மமிதா பைஜு மற்றும் கேஎஸ் ரவிகுமார் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், மற்றொரு அறிவிப்பு இன்று மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com