"எல்ஐகே" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ஏப்ரல் 10ந் தேதி வெளியாக உள்ளது.

"எல்ஐகே" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது ‘டியூட்’ பட வெளியீடு காரணமாக ‘எல்.ஐ.கே’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதன்பிறகு பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால், படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

மேலும், படத்தில் இடம் பெற்றுள்ள 3வது பாடலான அடாவடி என்ற பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com