சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவலை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
சிம்பு நடித்துள்ள 'பத்து தல' படத்தின் புதிய அப்டேட்... படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
Published on

சென்னை,

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 3-ந்தேதி நள்ளிரவு 12.06 மணிக்கு 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வருகிற மார்ச் 3-ந்தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதற்கு இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Studio Green (@StudioGreen2) February 28, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com