யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது- செல்வராகவன் பரபரப்பு பதிவு

தேவையற்றவர்களின் பேச்சுகளையே நினைத்துக்கொண்டிருந்தால் நாம் எங்கும் நகரமுடியாது என்று செல்வராகவன் கூறியுள்ளார்.
யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது- செல்வராகவன் பரபரப்பு பதிவு
Published on

சென்னை,

முன்னணி இயக்குனரான செல்வராகவன், தற்போது நடிகராகவும் கவனம் ஈர்த்து வருகிறார். சமீபகாலமாக செல்வராகவன் தத்துவங்களை பொழிந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அறிவுரைகளையும் அள்ளி தெளித்து வருகிறார். இந்த நிலையில், செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also Read
பிறந்தநாளில் கொலை…கணிக்க முடியாத கிளைமாக்ஸ் - சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் - எதில் பார்க்கலாம்?
யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது- செல்வராகவன் பரபரப்பு பதிவு

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்த உலகில் 'உங்களால் முடியாது' என்ற வார்த்தைகளையே நம்மை நோக்கி அனைவரும் வீசுவார்கள். இங்கு யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது. அவர்கள் மீது ஏகப்பட்ட குறைகள் இருக்கும் போது எப்படி விமர்சிக்க முடிகிறது? நாம் செய்யும் தவறு என்னவென்றால், அவர்கள் இப்படி சொல் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அவர்கள் இப்படி சொல்லிவிட்டார்களே... என்று நாம் நாள் முழுவதும் புலம்புவது தான். இப்படி இருந்தால் எப்படி நம் லட்சியத்தை அடைய முடியும்? மனது என்பது புனிதமானது. அதில் நல்ல எண்ணங்களை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தால் மிக சீக்கிரம் அடைய வேண்டிய லட்சியத்தை அடையலாம். தேவையற்றவர்களின் பேச்சுகளையே நினைத்துக்கொண்டிருந்தால் நாம் எங்கும் நகரமுடியாது” என்று கூறியுள்ளார்.

Also Read
மலையாள நடிகர் சோபி ஜார்ஜ் அதிரடி கைது - மோசடி வழக்குகள் அம்பலம்
யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது- செல்வராகவன் பரபரப்பு பதிவு
X

Daily Thanthi
www.dailythanthi.com