சினிமாவில் எதுவும் கணிக்க முடியாது: நடிகர் பரத்

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் முதலில் நான் நடிக்க இருந்தேன் என்று பரத் கூறியுள்ளார்.
சினிமாவில் எதுவும் கணிக்க முடியாது:  நடிகர் பரத்
Published on

சென்னை,

பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் பரத். காதல், எம்டன் மகன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பரத்திற்கு அதன்பிறகு வந்த படங்கள் அடுத்தடுத்து சறுக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்தன.இவரது நடிப்பில் சமீபத்தில் காளிதாஸ் 2 திரைப்படம் ரீலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் பரத் பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அதில் நடிகர் பரத் கூறியதாவது:'திருவிளையாடல் ஆரம்பட படத்தில் நான் தான் முதலில் நடிக்க இருந்தேன். பின்னர் இந்தக்கதை தனுசிடம் சென்றுவிட்டது. அதேபோல 'காதல்' படத்தில் தனுஷ் தான் நடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சினிமாவில் எதுவும்: கணிக்கவே முடியாது, என்று குறிப்பிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com