சல்மான் கானுடன் ஜோடி… சம்பளத்தில் சாதனை படைக்கும் நயன்தாரா!

'வாரிசு' பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ள இந்தி படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார்.
சல்மான் கானுடன் ஜோடி… சம்பளத்தில் சாதனை படைக்கும் நயன்தாரா!
Published on

சென்னை,

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார்.'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிறது. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா நாயகியாகவும் ஜொலித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக 'மனசங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.10 கோடி என்று பேசப்பட்டது. தென்னிந்திய சினிமாவில் இது நடிகைக்கான பெரிய சம்பளமாகவும் பேசப்பட்டது.

இதற்கிடையில், வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ள இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் அவரது சம்பளம் ரூ.11 கோடி என்று பேசப்பட்டுள்ளதாம். ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் நடிக்க உள்ளதால், ரசிகர்களிடம் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com