பவிஷின் “லவ் ஓ லவ்” படத்தின் டிரெய்லர் வெளியானது

மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளது.
பவிஷின் “லவ் ஓ லவ்” படத்தின்  டிரெய்லர் வெளியானது
Published on

பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளது.

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த பவிஷ் நாராயண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லவ் ஓ லவ்’. இதில் நாக துர்கா நாயகியாக நடிக்கிறார். மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் போகன் மற்றும் பூமி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை நவீன கோணத்தில், மனதைத் தொடும் வகையில் சொல்லும் காதல் கதையை கொண்ட இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘இப்படத்தின் ‘பிரோக்பாய்’ வீடியோ பாடல் வெளியானது. இப்பாடலை பிரதீப் பிஜே எழுதி பாடியுள்ளார்.

படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

‘லவ் ஓ லவ்’ படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா

இந்நிலையில், ‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லரை அனிருத் வெளியிட்டார். இப்படம் ஜீலை 10ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com