``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'' - ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது
``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'' - ராகவா லாரன்ஸ்
Published on

சென்னை,

தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

தற்போது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ள நிலையில், வி.சி.க. இன்று முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆதரவு கிடைக்கும்போது, த.வெ.க.வின் மொத்த பலம் 119 ஆக இருக்கும். இவை அனைத்தும் விஜய்க்கு சாதமாக முடிந்தால், விரைவில் அவர் முதல்-அமைச்சராக பதிவியேற்பார்.

இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அவர் அதில்,

Also Read
"அந்த படத்துக்காக உடலை குறைத்தேன்... ஆனால் கடைசியில்.." - நடிகை தனிஷா உருக்கம்
``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'' - ராகவா லாரன்ஸ்

``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு''

"மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டனர், அதன் மூலம் ஒரு புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இந்த விருப்பம் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும். இந்த ஜனநாயக முடிவை ஆதரித்து மதிக்கும் தலைவர்கள், மக்களின் மதிப்பைப் பெறுவார்கள். மாறாக, பிரச்சினைகளையோ அல்லது பிரிவினையையோ உருவாக்க முயற்சிப்பவர்கள், பொதுமக்களின் ஏமாற்றத்தையே சம்பாதிப்பார்கள்.

இறுதியாக, அனைத்துத் தலைவர்களும் புதிய அரசு அமைவதற்கு வழிவகுக்க வேண்டும். மக்களின் ஆணை எப்போதும் மதிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com