

மாடல் அழகியாக இருந்து நடிகை ஆனவர் டிவிஷா ஷர்மா (வயது 33). திருமணமானவர். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் கட்டாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு கடந்த 12-ந் தேதி, தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது பெற்றோர், புகுந்த வீட்டினர் வரதட்சணை கொடுமை செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டினர்.ஆனால், புகுந்த வீட்டினரோ, டிவிஷா போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமை ஆனவர் என்று கூறினர். வரதட்சணை கொடுமை புகாரின்பேரில், டிவிஷாவின் கணவரும், வக்கீலுமான சமர்த் சிங், மாமி யாரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவுப்படி, டிவிஷா உடல் 2-வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே, நடிகை டிவிஷா வழக்கில் போலீஸ் உரிய நடைமுறையை பின்பற்றியது என மத்தியபிரதேச டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்தியபிரதேச போலீஸ் டி.ஜி.பி. கைலாஷ் மக் வானா இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறி யதாவது:-நடிகை டிவிஷா வழக்கில் போலீஸ் உரிய நடைமுறையையும், விதிமுறைகளையும் பின்பற்றியது. டிவிஷா குடும்பத்தினர் கேட்ட தால், சி.பி.ஐ.யிடம் விசாரணையை ஒப்படைத்துள்ளோம்”இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டிவிஷா கொலை வழக்கு தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து விசாரித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-டிவிஷாவின் மாமியார் டெலிவிஷன் சேனல்களில் தோன்றி, டிவிஷாவை களங்கப்படுத்தும் கருத் துகளை தெரிவித்தார். அதனால் ஊடக தலையீடு அதிகரித்தது. விசாரணையை சி.பி.ஐ. ஏற்றுக் கொள்ளும். அதற்கான நடைமுறைகள் இப்போதே நடக்கும்.
இத்தகைய துரதிருஷ்டவசமான சூழ்நிலையை சந்திப்பதை விட விவாகரத்து வாங்கி விடுவது நல்லது என்ற செய்தியை எல்லா பெற்றோருக்கும் இவ்வழக்கு கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-வழக்கு குறித்த விவரங்களை வெளியிடும்போது, ஊடகங்கள் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதித்துறை பாதுகாப்பதாக ஊடகங்கள் சொல்வது எங்க ளுக்கு வேதனை அளிக்கிறது.பலியானவரின் குடும்பத்தினர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் ஆகியோரின் பேட்டிகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சட்டம் மற்றும் நடைமுறைப் படி அனைத்தும் நடக்கட்டும்.
அதுபோல், இரண்டு குடும்பத்தினரும் ஊடகங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது. தாங்கள் சொல்ல வேண்டியதை விசாரணை அமைப்பிடம் சொல்லலாம். சாட்சி ஆக வாய்ப்புள்ளவர்க ளையும் ஊடகங்கள் பேட்டி எடுக்க வேண்டாம். அது விசாரணை முடிவை பாதிக்கும்.பொதுமக்களும் யூகங்களை தவிர்த்து, விசாரணை அமைப்பு மீது நம்பிக்கை வைக்க வேண் டும். நியாயமான,சுதந்திரமான, பாரபட்சமற்ற சி.பி.ஐ. விசாரணை நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம். உரிய நேரத்தில் அதை முடிவுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு நீதிபதிகள் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.