கங்குலி பயோபிக் படப்பிடிப்பு தொடங்கியது

விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘தாதா’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.
கங்குலி பயோபிக் படப்பிடிப்பு தொடங்கியது
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படம் ‘தாதா’. இப்படத்தில், கங்குலியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், ‘தாதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நேற்று முதல் தொடங்கியுள்ளதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதனை நடிகர் ராஜ்குமார் ராவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து, "And it begins … The one and only #DADA" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படம் கங்குலியின் கேப்டன்சி காலம் மற்றும் நவீன இந்திய கிரிக்கெட்டை வடிவமைப்பதில் அவரது பங்கு ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025இல் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய பாத்திரத்தில் நடிக்க சரியானவர் ராவ்தான் எனவும், அவருக்கு நான் எல்லா விதத்திலும் உதவுவேன் எனக் கூறி இருந்தார் சௌரவ் கங்குலி.

முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1992 முதல் 2008 ஆம் ஆண்டு வரை விளையாடிய வீரர் கங்குலி அவரின் ரசிகர்களால் ‘தாதா’ என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com