‘லப்பர் பந்து’ ரீமேக்....27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ராஜசேகர் - ரம்யா கிருஷ்ணன்

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியதாக தெரிகிறது.
Ramya Krishnan to work with Rajasekhar in Lubber Pandhu remake
Published on

சென்னை,

தமிழ் படமான லப்பர் பந்துவின் உரிமையை வாங்கி, அதை தெலுங்கில் ரீமேக் செய்ய ராஜசேகர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கியதாக தெரிகிறது.

பிரபல இயக்குனர் ஐ.வி. சசியின் மகன் அனி ஐ.வி. சசி தெலுங்கு ரீமேக்கை இயக்குவதாக கூறப்படுகிறது. ராஜசேகர் இப்படத்தில் முக்கிய வேடத்திலும், ரம்யா கிருஷ்ணன் அவருக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு அல்லரி பிரியுடு மற்றும் பலராம கிருஷ்ணனுலு போன்ற வெற்றிப் படங்களில் ஒன்றாக நடித்தனர்.

இந்த ரீமேக்கிற்காக கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். 35 சின்ன கத காடு புகழ் விஸ்வதேவ் ரச்சகொண்டாவும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com