ரசிகரிடம் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா

தன்னை நேரில் காண்பதற்காக வந்த ரசிகரிடம் நடிகை ராஷ்மிகா மந்தனா டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரசிகரிடம் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா
Published on

பெங்களூரு,

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்ற ரசிகர், ராஷ்மிகாவின் சொந்த ஊருக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தெலுங்கானாவில் இருந்து சாலை மார்க்கமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஷ்மிகாவின் சொந்த ஊரான குடகு மாவட்டத்தை நோக்கி புறப்பட்டார்.

குடகு மாவட்டம் வரை வந்த அவரால் ராஷ்மிகாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்வேறு இடங்களில், அவரது வீட்டு விலாசம் கேட்டு விசாரித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிலர், இது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆகாஷிடம் விசாரணை நடத்திய போலீசார், குடகு மாவட்டத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அறிவுரை கூறி தெலுங்கானாவுக்கு திருப்பி அனுப்பினர். 

மும்பையில் படப்பிடிப்பில் இருந்த நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது ரசிகரிடம், டுவிட்டர் வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், என்னை காண்பதற்காக வெகு தூரம் பயணித்து எனது வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள். தயது செய்து இனி இது போல் செய்ய வேண்டாம். 

உங்களை சந்திக்க முடியாமல் போனது குறித்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேன். அதுவரை உங்கள் இடத்தில் இருந்தே அன்பு செலுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com